செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கணினி அறிவியல் பாடம் 6முதல் 10ம் வகுப்பு வரை அறிவியலில் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் அறிவியல் ஆசிரியர்களுடன் நாமும் சேர்ந்து TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளோம். இது ஒன்றும் நல்ல செய்தி அல்ல. இளங்கலை (இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல் மற்றும் கணினி அறிவியல்53ஆயிரத்திற்கு மேற்பட்ட) படித்து முடித்த சுமார் 3இலட்சம்பேர் வருடத்திற்கு  சுமார் 100 பணியிடங்களுக்கு தேர்வு எழுத உள்ளோம். 

53000 மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டுமானால் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கு ஒரு பி.எட் கணினி பட்டதாரியை  தொகுப்பூதிய அடிப்படையிலாவது அரசு பணியில் அமர்த்த வேண்டும். 
அனைவரும் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்றால் மட்டுமே அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக