செவ்வாய், 24 ஏப்ரல், 2018

53670 பி.எட்.கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு நாமம்.

53670 பி.எட்.கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு நாமம்.


அறிவியலில் ஒரு பகுதியாக கணினி அறிவியல் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு வந்ததும்.,

இந்த அறிவிப்பை  தடை செய்யவும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக கொண்டு வர போராட்டங்களும் உண்ணாவிரதம் நடத்தியதன் விளைவாக..,

 

 இந்த போராட்டங்களை அடுத்து அரசு புதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் ஆறாவது பாடமாக கொண்டுவர ஆலோசனை நடைபெறுவதாகவும், புதிய பாடத்திட்ட பணிகள் முடிவடைந்த பின்பு இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறிஉள்ளார்கள்.

ஆனால் தற்போது
SCERT நமது கோரிக்கைகளை ஏற்று  
கணினி அறிவியல் பாடம் அறிவியலில் ஒரு அலகாக வரஉள்ளதாக கூறி உள்ளது. இதனால் 53670 பி.எட்.கணினி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு நாமம்  போட்டுவிட்டது. இதனால் அனைவருக்கும் அரசுவேலை வெறும் கனவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அனைத்து பி.எட் கணினி பட்டதாரிகளும்  வேடிக்கை பார்ப்பது தான்.



செவ்வாய், 17 ஏப்ரல், 2018

கணினி அறிவியல் பாடம் 6முதல் 10ம் வகுப்பு வரை அறிவியலில் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் அறிவியல் ஆசிரியர்களுடன் நாமும் சேர்ந்து TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுத உள்ளோம். இது ஒன்றும் நல்ல செய்தி அல்ல. இளங்கலை (இயற்பியல்,வேதியியல்,விலங்கியல்,தாவரவியல் மற்றும் கணினி அறிவியல்53ஆயிரத்திற்கு மேற்பட்ட) படித்து முடித்த சுமார் 3இலட்சம்பேர் வருடத்திற்கு  சுமார் 100 பணியிடங்களுக்கு தேர்வு எழுத உள்ளோம். 

53000 மேற்பட்ட பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வேண்டுமானால் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கு ஒரு பி.எட் கணினி பட்டதாரியை  தொகுப்பூதிய அடிப்படையிலாவது அரசு பணியில் அமர்த்த வேண்டும். 
அனைவரும் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை அரசிடம் கொண்டு சென்றால் மட்டுமே அனைவருக்கும் வேலை கிடைக்கும்.

புதன், 11 ஏப்ரல், 2018