சனி, 29 செப்டம்பர், 2018

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

ஆசிரியர் தினமும் - கணினி பட்டதாரிகளும்.



அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் இன்று பி.எட் கணினி அறிவியல் பட்டம் பெற்று ஆசிரியர் ஆகும் கனவோடு காத்துகொண்டிருக்கும் 53000 மேற்பட்ட  பட்டாதாரிகளின் அவலநிலை.
புதிய பாடத்திட்டமும் கணினி அறிவியல் பாடமும்.
தற்போது வந்துள்ள புதிய பாடத்தில் கணினி அறிவியல் முக்கிய பாடமாக கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை நடத்த தேவையான கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறிவந்தனர்.  கணினி  அறிவியல் தனி பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருப்பதாகவும் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் கூறிஉள்ளார். ஆனால் அனைத்தும் வெறும் வாய் வாக்குறுதிகள் மட்டுமே.  புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9 வகுப்பு அறிவியல் புத்தகத்தில் வெறும் நான்கு பக்கங்களே கணினி பற்றி தகவல் கொடுத்துவிட்டு கணினிஅறிவியல் பாடம் தனி அலகாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும்  இப்பாடத்தை  அறிவியல் ஆசிரியர்களே நடத்துவார்கள் என்றும் அரசு கூறிவருகிறது,
அறிவியலில் சிறு அலகாக சேர்க்க கூடாது.
7, 8 , 10 வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய பாடப்புத்தகங்கள் வெளிவரஉள்ளன இந்த வகுப்புகளுக்காவது கணினி பாடத்தை தனி படமாக கொண்டுவர வேண்டும். அறிவியலில் சேர்த்துள்ளது மாணவர்களுக்கு எந்த வகையிலும் கணினி கல்வி சென்றடையாது.  கணினி ஆய்வகங்களை மேம்படுத்தி தனியார் பயிற்றுனர்களை தவிர்த்து பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் கணினி அறிவியல் பாடத்தை அறிவியலில் சேர்க்காமல் இருந்தால் கூட வரும் காலங்களில் தனி பாடமாக கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
ஸ்மார்ட் வகுப்பறைகள்.
தமிழக அரசு புதிதாக கொண்டுவந்துள்ள ஸ்மார்ட் வகுப்புகளை கையாள திறமையான பி.எட் கணினி பட்டதாரிகளை பணியில் அமர்த்த வேண்டும்.
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் அறிமுக படுத்தி போதுமான கணினி அறிவியல் ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தில் 11, 12 வகுப்புகளில் மூன்று பிரிவுகளில் கணினி அறிவியல் பாடம் முதன்மை பாடமாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இப்புதிய பாடத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளிகளிலும் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணினி அறிவியல் பாடம் முதன்மை பாடமாக நடத்தப்படுகிறது.        இப் பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பி.எட் கணினி அறிவியல் ஆசிரியர்கள் இல்லை. தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் மற்றும் அதிக நிதி ஒதுக்கியும் அதிக அளவில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  கணினி பாடம் நடைமுறை படுத்த வில்லை. 6000 மேற்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில்  1880 பள்ளிகளில் மட்டுமே கணினி அறிவியல் பாடம் நடத்தப்படுவதாகவும் 1880 கணினி ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்கள் பணியில் அமர்த்த பட்டுள்ளனர்.  4000 மேற்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் உடனே கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் சுமார் 4000 கணினி ஆசிரியர் பணியில் அமர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் கல்வித்துறை திறன்பட செயல்படுகின்றது என்றால்  2014-15 கல்வியாண்டில் 56.55 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை  2018-19 கல்வியாண்டில்  46.60 லட்சம் மாக எவ்வாறு குறைந்தது. ஆறாவது  தனிப்பாடமாக கணினி அறிவியல் கொண்டு வந்து தேவையான கணினி ஆய்வகங்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை பணியில் அமர்த்தாத வரை இச்சரிவு நீடிக்கும்.

சனி, 1 செப்டம்பர், 2018

அலைகழிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்! தொடரும் பிரச்சனைகள்!

நன்றி.
பி.எட் கணினி பட்டதாரிகளின் அவலநிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி செப்டம்பர் - 2018.