செவ்வாய், 30 அக்டோபர், 2018

தமிழக அரசு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி.



அரசு பள்ளிகளில்கணினி ஆசிரியர் பணியில் சேரஇனிமுதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்எனபள்ளிகல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. அரசு பள்ளிகளில், 1994ல்கணினி அறிவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.முதலில்கணினி அறிவியல் சார்ந்த, 'டிப்ளமாபடித்தவர்கள்பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்குகணினி பயிற்றுனர்களாகநியமிக்கப்பட்டனர்அதன்பின்பி.எஸ்.சி., கணினி அறிவியல் பாடம் அறிமுகமானதால்பி.எஸ்.சி., - பி.எட்., முடித்தவர்கள்,கணினி பயிற்றுனர்களாக நியமிக்கப் பட்டனர்.இந்த அடிப்படையில், 765 ஆசிரியர்கள்தற்போது பணியாற்றுகின்றனர்ஆனால்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்தமுதுநிலை ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால்கணினிஆசிரியர் நியமனத்தில்தமிழக அரசுபுதிய முடிவு எடுத்துள்ளது.அதன்படிதற்போது, 809 காலியிடங்களை நிரப்பமுதுநிலைபடித்தவர்களையே தேர்வு செய்ய வேண்டும் எனபள்ளி கல்வி செயலகம் உத்தரவிட்டுள்ளதுமேலும்  அதேபோலதற்போது,முதுநிலை படிப்பு முடித்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்ஏற்கனவே பட்டப்படிப்பு கல்வி தகுதி யுடன் பணி பெற்றவர்களுக்கு,முதுநிலை அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதனை வரவேற்றுள்ள பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலசங்கத்தின் மாநிலஇணைச் செயலாளர் S.புருஷோத்தமன் அவர்கள் கூறுகையில் மாணவர்களின்  அறிவுத்திறனுக்கும், தற்போது உள்ள கணினிமயமான காலகட்டத்திற்கு பி.எட் கணினி அறிவியல் முதுகலை பட்டதாரிகளையே பணியில் அமர்த்த வேண்டும்.  ஏனைய முதுகலை ஆசிரியர்களை போல் தங்களுக்கும் உரிய அங்கீகாரம் வேண்டும். அதற்கு எங்களுடைய கல்வித்தகுதியைமுதுகலையாக மாற்றி அமைத்த தமிழக அரசு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி. மேலும் சென்ற ஆண்டு  அறிவித்த 765கணினி அறிவியல் பணியிடங்களை விரைவில் நிரப்பவேண்டும்மேலும் தற்போது 11,,12ம்  வகுப்புகளுக்கு மூன்று   கணினிஅறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் மீதம் உள்ள 4000 மேல்நிலை பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம்விரைவில் இந்த அரசு அறிமுகம் செய்து அப்பணியிடங்களுக்கும் முதுகலை பட்டதாரி கணினி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும்.

S.புருஷோத்தமன். (மாநில இணைச் செயலாளர்)
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரி மற்றும் 
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நலசங்கம்.