வியாழன், 20 டிசம்பர், 2018

எம்.சி.ஏ. படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல்படிப்புகள் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல..,

தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் 33 பட்ட மேற்படிப்புகள் அரசுப் பணிக்குத் தகுதியற்றவை என தமிழக அரசின் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.


பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள், அவற்றுக்குட்பட்ட கல்லூரிகளில் கற்பிக்கப்படும் எம்.சி.ஏ. படிப்பு உள்ளிட்ட 13 வகையான முதுநிலை அறிவியல்படிப்புகள் எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணையானவை அல்ல. என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெரியார், பாரதியார் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் எம்.காம்., நிர்வாகச் செயலர், எம்.காம்., கணினி பயன்பாடு உள்ளிட்ட 20 படிப்புகள் எம்.காம்., படிப்புக்கு இணையற்றவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.



வழக்கமாக ஒரு படிப்புக்கு இணையான இன்னொரு படிப்பு உருவாக்கப்பட வேண்டுமென்றால், மூலப்படிப்புக்கான பாடத்திட்டத்தில் 70 சதவீதம் புதிய படிப்புக்கான பாடத்திட்டத்திலும் இடம் பெற வேண்டும் என்பது விதியாகும்.ஆனால், புதிய பாடத்திட்டம் அத்தகையதாக இல்லை என்பதால் புதிதாகத் தொடங்கப்பட்ட படிப்புகள் மூலப் படிப்புக்கு இணையற்றவை என்று அதற்காக அமைக்கப்பட்ட சமானக் குழுவின் 59-ஆவது கூட்டத்தில் முடிவெடுத்து, அதனடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக